பிலிப்பைன்ஸில் மாணவர்களுக்கு போதை மருந்து சோதனை!

Saturday, September 3rd, 2016

பிலிப்பைன்ஸில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேரும் புதிய மாணவர்கள், அவர்களை படிப்பை தொடங்குவதற்குமுன், சட்ட விரோதமாக போதை மருந்தை உட்கொண்டுள்ளார்களா என்பதை கண்டறிய சோதனை ஒன்றை நடத்தும் திட்டத்தை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

போதைப்பொருள் இல்லா பல்கலைக்கழக வளாகங்களை உருவாக்குவதன் ஒரு முயற்சி இது என உயர் கல்வித்துறையின் மூத்த அதிகாரியான ஜுலிடோ விட்ரிலோ தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிலிப்பைன்ஸ் அதிபராக பொறுப்பேற்று கொண்ட ரோட்ரிகோ டுடர்டோ, நாட்டில் வளம் கொழிக்கும் வர்த்தகமான சட்டவிரோத போதை பொருள் வர்த்தகத்தை முற்றிலுமாக அகற்றிவிட உறுதி எடுத்துள்ளார்.மே மாதம் ரோட்ரிகோ டுடர்டோ அதிபராக பொறுப்பேற்று கொண்டதில் இருந்து இதுவரை சுமார் 2,000 போதைப் பொருளை உட்கொள்வோர் மற்றும் விநியோகஸ்தர்கள் நீதிக்கு புறம்பாக கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

160824023416_philippine_president_rodrigo_duterte_512x288__nocredit

Related posts: