பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிப்பு!

Saturday, November 18th, 2023

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மான்டெனா தீவை மையமாகக் கொண்டு 78 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

000

Related posts: