பிறந்த நாள் வாழ்த்துக்கு பிடல் காஸ்ட்ரோ நன்றி!

தனத 90அவது பிறந்த நாளில் வாழ்த்துத் தெரிவித்த ஆதரவாளர்களுக்கு கியூபாவின் புரட்சிகரத் தலைவர் பிடல் காஸ்ரோ நன்றி தெரிவித்துள்ளார்.
ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித்தாளுக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில் சீனாவையும், ரஷியாவையம் புகழ்ந்தள்ள அவர் தனது இளமை காலத்தை பற்றிய நினைவுகளை அதிகமாக எழுதி, அதிபர் ஒபாமாவை விமர்சித்திருக்கிறார்.
தன்னுடைய சகோதரர் ராவுலிடம் அதிகாரத்தை ஒப்படைக்கும் முன்பு, பிடல் காஸ்ட்ரோ 50 ஆண்டுகள் கியூபாவை ஆட்சி செய்தார். அதிபர் ராவுல் பொருளாதார கட்டுபாடுகளை தளர்த்தி அமெரிக்காவுடன் ராஜீய உறவுகளை மீட்டுள்ளார். பிடல் காஸ்ட்ரோ பல மாதங்களாக பொது நிகழ்வுகளில் தோன்றவில்லை என்பத குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் தொடுத்துள்ள பாகிஸ்தான்!
இந்தோனேஷியாவில் சுனாமி: பலர் உயிரிழப்பு !
எங்கள் மீது பொருளாதார தடைகள் விதித்தால் - சர்வதேசத்தை மிரட்டுகிறார் புடின்!
|
|