பிரேதப் பரிசோதனையில் வெளிவந்தது உண்மை.!

Thursday, September 22nd, 2016

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில், திருப்பூரை சேர்ந்த சரவணன் எம்.டி. மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்தார்.

கடந்த ஜூலை 10ஆம் திகதி, கல்லூரி விடுதி அறையில், சந்தேகமான முறையில் சரவணன் இறந்து கிடந்தார். இதை அடுத்து, சரவணனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், அவரின் பெற்றோர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில், சரவணன் உடலை பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், வெளிட்ட அறிக்கையில், சரவணனுக்கு, யாராவது விஷ ஊசியை செலுத்திருக்க வேண்டும், அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை, நவம்பர் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

According-to-the-autopsy-report-AIIMS-student-Saravanan

Related posts: