பிரேசில் தீவில் 12 ஆண்டுக்கு பின் பிறந்த முதல் குழந்தை!

பிரேசில் நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுக்குள் வைத்திருந்த தீவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவர் குழந்தை பெற்றுள்ளார். புதிய குழந்தையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
பிரேசிலின் நட்டால் நகரத்திலிருந்து சுமார் 370 கிலோமீற்றர் தொலைவிலுள்ள 3,000 மக்கள் மட்டுமே வசிக்கும் கடற்கரைக்கு பெயர் போன இத்தீவில் கடுமையான மக்கள் தொகை கட்டுப்பாடு விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் 12 ஆண்டுக்கு பிறகு இத்தீவில் பெண்ணொருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
22 வயதான அந்தப் பெண் அவர் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை. அவருக்கு குழந்தை பிறப்பு என்றால் என்ன என்று தெரியாத நிலையில் இருந்தார்.
வீட்டிலிருந்த போது திடீரென பிரசவ வலி ஏற்படவே அவர் அலறினார். உடனே அங்கு ஓடிச்சென்ற கணவர் அவருக்குப் பிரசவம் பார்த்தார். பின்னர் அப்பெண்ணும் குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பல ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் தீவில் பிறந்த குழந்தையை அங்குள்ள மக்கள் கொஞ்சி மகிழ்கின்றனர். துணிகள் உள்ளிட்ட பொருட்கள் கொடுத்து அக்குடும்பத்துக்கு உதவுகின்றனர்.
Related posts:
|
|