பிரேசில் ஜனாதிபதி மீது கையூட்டல்  குற்றச்சாட்டு.

201703131042227111_Ghosts-Scare-Brazil-President-leave-From-Residence_SECVPF Tuesday, June 27th, 2017

பிரேசில் ஜனாதிபதி மிக்கெல் தெமர் மீது அந்த நாட்டின் விசாரணையாளர்கள் கையூட்டல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்

அவரது ஊழல் குற்றங்களுக்கு சாட்சியாக இருக்கும், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முக்கிய அரசியல்வாதி ஒருவருக்கு பணம் வழங்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.தற்போது அவர் மீதான குற்றச்சாட்டு பத்திரம் உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது

இனி இந்த குற்றச்சாட்டுகளை நாட்டின் கீழ் சபைக்கு அனுப்புவதா? இல்லையா? என்பதை, உயர் நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளதுநாட்டின் கீழ்சபையே ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்ற வழக்கு விசாரணை நடத்துவதா? இல்லையா? என்பதை வாக்கெடுப்புக்கு உட்படுத்தி தீர்மானிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.