பிரேசில் ஜனாதிபதிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

Sunday, June 11th, 2017

பிரேசில் ஜனாதிபதி மைக்கல் டெமர் மீது சுமத்தப்பட்டிருந்த தேர்தல் முறைகேடு வழக்கிலிருந்து அவரை விடுவித்து பிரேசில் தேர்தல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மைக்கல் டெமர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில், இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக தேர்தல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரேசில் நாட்டில் ஜனாதிபதியாகவிருந்த டில்மா ரூசெப் முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து துணை ஜனாதிபதியாக இருந்த மைக்கல் டெமர் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.

இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது டில்மா ரூசெப்புக்காக தேர்தல் நிதி திரட்டுவதில் மைக்கல் டெமர் முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது முறைபாடு பதிவு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் அவர் பதவி விலக மறுத்த நிலையில், அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.அதன்படி குறித்த வழக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில், அவர் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related posts: