பிரேசில் உதைப்பந்தாட்ட வீரர் விமான விபத்தில் 75 பேர் உயிரிழப்பு!
Wednesday, November 30th, 2016பிரேசில் நாட்டின் உதைப்பந்தாட்ட வீரர்களுடன் சென்ற பிரிட்டிஷ் ஏரோபேஸ் 146 ரக விமானம் கொலம்பியாவில் விபத்துககுள்ளான சம்பவத்தில் 75 பேர் உயிரிழந்துள்ளா. 6 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிர் இழந்தார்.
இந்தச் சம்பவத்தில் கொலம்பியா செல்லும் முன் 4 வீரர்களை தவிர மற்ற வீரர்கள் பலியானது பெரும் கவலையை ஏற்படுத்தியிருப்பதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவில் இருந்து கொலம்பியாவின் மெடிலின் சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் சென்று கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிரேசில் முதல் தர உதைப்பந்தாட்ட வீரர்கள் அணியினர் பொலியாவில் உள்ள சாண்டாகுரூஸ் விமான நிலையத்திலே இருந்தே இதில பயணித்துள்ளனர். மொத்தம் 81 பேர் விமானத்தில் பயணம் செய்தனர். இதில் 9 பேர் விமான பணியாளர்கள்.
பிரேசில் உதைப்பந்தாட்ட வீரர்கள் இன்று அங்கு நடைபெற உள்ள கோபா சூடாமெரிக்கானா (Copa Sudamericana) தொடரில் பங்கேற்க இருந்தனர்.
மெடிலின் நகரில் உள்ள அட்லடிக்கோ தேசிய அணியினருடன் அவர்கள் 2 போட்டிகளில் விளையாட இருந்தார்கள். இந்த விமானம் மெடிலின் நகரை நெருங்கும் நேரத்தில், விமானம் மலைகள் மேல் பறந்து கொண்டிருந்தது.
இலங்கை நேரப்படி நேற்று (29) காலை 9.00 மணியளவில் விமானம் லா யூனியன் என்ற மலைப்பாங்கான பகுதியில் விபத்துக்குள்ளானது.
விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் விமானம் விழுந்த இடத்திற்கு மீட்பு படையினர் சென்றனர். ஆனால் போதிய வெளிச்சம் இல்லாததால் ஹெலிகாப்டர் திரும்பி வந்துவிட்டது.
வீத வழியாக ஆம்புலன்ஸ்கள் மற்றும் மீட்பு படையினர் விரைந்தனர். விபத்து நடந்த இடத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்துள்ளது. இருப்பினும் மீட்பு படையினர் துரித நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சாபேகோயின்ஸ் ரியல் அணியின் தடுப்பாட்ட வீரர் ஆலன் ரஸ்செல் உள்ளிட்ட 4 உதைப்பந்தாட்ட வீரர்கள், 2 விமான பணியாளர்கள் என 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிர் இழந்துள்ளார்;. அதே சமயம் மற்ற வீரர்கள் உப்பட மற்ற பயணிகள் அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
மின்தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடந்ததாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பிரேசில் வீரர்கள் விமானத்தில் ஏறும் முன் குரூப் வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தனர்.
Related posts:
|
|