பிரேசில் அணியின் போராட்டம் விணானது!

Tuesday, June 19th, 2018

ஐந்து முறை உலக சாம்பியன் ஆன பிரேசில் அணி, சுவிட்லாந்துக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ செய்தது.

ரஷ்யாவில் நடக்கும் உலக கோப்பை தொடரில் ‘இ’ பிரிவு லீக் போட்டியில் நெய்மர் தலைமையிலான பிரேசில் அணி, சுவிட்சர்லாந்தை சந்தித்தது. இதில் பிரேசில் எளிதாக வெல்லும் என நம்பப்பட்டது. இதற்கேற்ப போட்டியின் 20 வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் தலையால் முட்டித் தள்ளிய பந்தை, 23 மீ., துாரத்தில் இருந்து பெற்றார் பிரேசிலின் பிலிப் கவுட்னினோ.

அதேவேகத்தில் வலது காலால் இவர் அடித்த பந்து கோல் போஸ்ட் மீது மேலாகச் சென்று போஸ்ட் மீது பட்டு கோலாக மாற, முதல் பாதியில் பிரேசில் அணி 1-0 என முன்னிலை பெற்றது. உலக கோப்பை தொடரில் 1966 முதல் கோல் ஏரியாவுக்கு வெளியில் இருந்து மட்டும் பிரேசில் அணி கோல் அடித்தது 37வது முறையாக நடந்தது.

இரண்டாவது பாதியில் மனம் தளராமல் போராடியது சுவிட்சர்லாந்து அணி. போட்டியின் 50 வது நிமிடத்தில்

சுவிட்சர்லாந்து அணிக்கு ‘கார்னர் கிக்’ வாய்ப்பு கிடைத்தது. ஷாக்ரி அடித்த இந்த பந்தை பிரேசில் கோல் ஏரியாவுக்குள் நின்று கொண்டிருந்த ஜுபெர், அந்தரத்தில் உயர்ந்து தலையால் முட்டி கோலாக மாற்றினார். அப்போது தனக்கு முன் இருந்த மிராண்டாவை தள்ளி விட்டார் என பிரேசில் அணியினர் முறையிட்ட போதும் நடுவர் கண்டு கொள்ளவில்லை. இதனால் ஸ்கோர் 1-1 என சமன் ஆனது.

இதையடுத்து வீறு கொண்டு எழுந்த நெய்மர் பலமுறை கோல் அடிக்க முயற்சித்தார். மறுபக்கம் இவரை பிடித்து கீழே தள்ளுவது, ‘ஜெர்சியை’ பிடித்து இழுத்து விடுவது என ‘பவுல்’ செய்வதில் அதிக அக்கறை காட்டினர் சுவிட்சர்லாந்து வீரர்கள்.

நெய்மரை மட்டும் 10க்கும் மேல் ‘பவுல்’ செய்தனர். இதனால் சுவிட்சர்லாந்தின் மூன்று வீரர்கள் ‘மஞ்சள் கார்டு’ பெற்றனர்.

இரண்டாவது பாதியில் மட்டும் 16 முறை கோல் முயற்சி போதும் பிரேசில் அணியினால் கூடுதலாக ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் 1-1 என போட்டி ‘டிரா’ ஆனது.  கடந்த 1966 க்குப் பின் உலக கோப்பை தொடரில் பங்கேற்ற முதல் போட்டியில் தோற்றது இல்லை என்ற பெருமையை தக்கவைத்தது சுவிட்சர்லாந்து.

நேற்று ‘டிரா’ செய்த பிரேசில் அணி கடந்த 1998 முதல், உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் ‘குரூப்’ போட்டிகளில் தோற்காமல் வலம் வருகிறது. 13 போட்டிகளில் 10 வெற்றி பெற்றது. 3 ’டிரா’ செய்தது.

* தவிர 21 உலக கோப்பை தொடரில் களமிறங்கிய முதல் போட்டியில் தோற்றது கிடையாது என்ற பெருமையையும் பிரேசில் தக்கவைத்தது.

Related posts: