பிரேசிலை ஆட்டிப்படைக்கும் கொரோனா – இதுவரை 41 ஆயிரம் பேர் பலி!

Saturday, June 13th, 2020

பிரேசிலில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 30 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு அங்கு 41,900 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பிரேசிலில் கொரோனா வைரஸ் பரவலானது வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது பிரித்தானியாவின் எண்ணிக்கையை கடந்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பிரித்தானியாவில் இதுவரையில் 41,481 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி தற்போது அமெரிக்காவைத் தொடர்ந்து அதிகளவான இறப்புக்கள் பிரேசிலில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிகாவில் இதுவரையில் கொரோனா காரணமாக 21 இலட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு அங்கு 1 இலட்சத்து 16 ஆயிரம் பேர் மரணித்துள்ளனர்.

இதேவேளை, 3 இலட்சத்து 9 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் 8 ஆயிரத்து 890 மரணங்களுடன் இந்தியா குறித்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: