பிரேசிலில் மீண்டும் சிறை கலவரம்: 10 பேர் பலி!

Monday, January 16th, 2017

பிரேசிலில் உள்ள மற்றொரு சிறையை, சிறைக் கைதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இது இந்த ஆண்டில் பிரேசிலில் நடக்கும் மூன்றாவது மிகப் பெரிய சிறை கலவரமாகும்.

பிரேசிலின் வட கிழக்கு நகரான நடாலில் உள்ள அல்காகஸ் சிறையில் நடந்த மோதல்களில் குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் சிலரின் தலை வெட்டப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிறையில் உள்ள போட்டி குழுக்களுக்குள் நடந்த மோதலில் பலர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.சிறையின் வெளி மதில்சுவரின் அருகே உள்ளே நுழைய போலீசார் காத்துக் கொண்டிருக்கும் போது, சிறை கலவரத்தின் போது நடந்த வெடிப்பு சத்தத்தை சிறையின் வெளியேயும் கேட்க முடிந்ததாக கூறப்படுகிறது

_93574562_brazilriot

Related posts: