பிரேசிலின் சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு!

Wednesday, May 29th, 2019

பிரேசிலில் சிறைக் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில் 57 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பிரேசிலின் அமேசோனாஸ் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் அதிகளவில் இடம்பெற்று வருகின்றதனால் அங்கு குற்றச் சம்பவங்களும் அதிகம் இடம்பெறுகின்றன. இதன்போது அதிகளவானோர் கைது செய்யப்படுவதனால் அங்குள்ள சிறைச்சாலைகளில் அதிகளவான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அமேசோனாஸ் மாகாணத்தின் தலைநகர் மனாயஸில் உள்ள நான்கு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தல் முழுவினருக்கிடையே இடையே ஏற்பட்ட மோதல் பின்னர் கலவரமாக மாறியதனால் இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகிலேயே அதிக கைதிகளை சிறைகளில் கொண்டுள்ள நாடாக உள்ள பிரேசிலில் மொத்தம் 368,049 கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: