பிரெக்ஸிட் விவகாரம் – தெரேசா மேயின் ஒப்பந்தம் மீண்டும் தோல்வி!

Wednesday, March 13th, 2019

 ‘பிரெக்ஸிட்’ விவகாரம் தொடர்பாக தெரசா மே கொண்டு வந்த ஒப்பந்தத்துடன் வெளியேறும் தீர்மானம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 2-வது முறையாக தோல்வி அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு 29 ஆம் திகதி முடிவடைவதால், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக அடுத்த மாதம் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரசா மே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ விவாகரம் தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தெரசா மே கொண்டு வந்த தீர்மானத்தில் மீதான வாக்கெடுப்பு 149 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் தெரசா மே கொண்டு வந்த தீர்மானம் 2வது முறையாக நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


துருக்கியில் 12,000க்கு அதிகமான பொலிஸார் பணி இடைநிறுத்தம்!
எல்லையில் தடுப்புச்சுவர் கட்ட டிரம்ப் உத்தரவு - மெக்சிகோ அதிபர் கடும் கண்டனம்!
தரையில் மோதி சிதறிய விமானம் -அமெரிக்காவில் விபத்து!
சீன ஜனாதிபதியை சந்தித்த வடகொரிய ஜனாதிபதி!
துருக்கியில் கட்டிடம் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு!