பிரியந்த குமாரை காப்பாற்ற முயன்றவரை கௌரவித்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்!

Wednesday, December 8th, 2021

பிரியந்த குமாரை காப்பாற்ற முயன்ற மாலிக் அட்னானுக்கு பிரதமர் இம்ரான் கான் பாராட்டுச் சான்றிதழை வழங்கியுள்ளார்.

மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபவர்களை அரசாங்கம் விட்டுவைக்காது என்பதை வலியுறுத்தி, பிரியந்த குமாரை கொலை செய்யாமல் காப்பாற்ற முயன்ற மாலிக் அட்னானுக்கு, பிரதமர் இம்ரான் கான், பாராட்டுச் சான்றிதழை   நேற்று (செவ்வாய்க்கிழமை) வழங்கியுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில், இலங்கை பிரஜை பிரியந்த குமாரவுக்கு இரங்கல் தெரிவிக்கும்போது, மாலிக் அட்னானின் துணிச்சல் நம் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்று பிரதமர் கூறியுள்ளார்.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், “நாட்டில் முன்மாதிரிகள் முக்கியம், ஏனென்றால் மக்கள் அவர்களைப் பின்பற்றுகிறார்கள். உடல் சக்தியை விட தார்மீக சக்தி பெரியது.

மேலும் அந்த மிருகங்களுக்கு எதிராக மாலிக் அட்னான் நின்ற விதத்தை, நமது இளைஞர்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

இதேவேளை, அவரது குடும்பம் அவரது மாதச் சம்பளத்தை தொடர்ந்து பெறும் என்று சியால்கோட்டின் வணிக சமூகம் என்னிடம் உறுதியளித்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: