பிரித்தானிய வெளிவிவகார அமைச்சில் மாற்றம்!

boris-johnson Tuesday, July 10th, 2018

பிரெக்சிற் நடவடிக்கையின் செயலாளர் டேவிட் டேவிஸ் பதவி விலகியுள்ள நிலையில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொறிஸ் ஜோன்சனும் பதவிவிலகியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரெக்சிற் தொடர்பாக அண்மையில் பிரித்தானிய பிரதமர் தெரெசா மே எடுத்த சில முடிவுகளில் உடன்பாடு இல்லாதமை காரணமாக டேவிட் டேவிஸ் பதவிவிலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
டேவிட் டேவிசின் பதவிவிலகலை ஏற்றுக் கொண்ட பிரதமர் தெரெசா மே, டொமினிக் ரொப்பை அந்த பதவிக்கு நியமித்து சில மணி நேரத்தில் பொறிஸ் ஜோன்சனும் பதவிவிலகியுள்ளார்.
பிரெக்சிற் தொடர்பாக இறுதி முடிவெடுக்க வேண்டிய முக்கியமான இருவரும் பதவிவிலகியுள்ள நிலையில், பிரெக்சிற் விவகாரம் திட்டமிட்டபடி முடிவுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஆஸியில் விருந்து நிகழ்வின்போது கத்தியால் தாக்கியதில் 7 பேர் கவலைக்கிடம்!
பிரேசிலில் பொது செலவினத்திற்கு உச்ச வரம்பு!
முதல்வர் கவலைக்கிடம்: செய்தி கேட்ட அதிமுக தொண்டர் நெஞ்சுவலியால் மரணம்!
அரசியலுக்கு வருவதாக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் அறிவிப்பு!
எரிமலையை தொடர்ந்து நிலநடுக்கம் - கௌதமாலாவில் சோகம்!