பிரித்தானிய ராஜகுடும்பத்தில் புதிய சலசலப்பு – பறிக்கப்படுமா இளவரசர் பட்டம்; மன்னரின் முடிவு!
Saturday, October 8th, 2022பிரித்தானிய இளவரசர் வில்லியத்தின் பட்டம் பறிக்கப்படடுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடாபில் வாக்கெடுப்பும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய ராஜகுடும்பம், தொன்மையான அடக்குமுறை பாரம்பரியம் கொண்டது என வேல்ஸ் கவுன்சில் உறுப்பினர் ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையிலேயே தற்போது வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வேல்ஸ் இளவரசர் பட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வேல்ஸ் கவுன்சில் ஒருமனதாக வாக்கெடுப்பை முன்னெடுத்துள்ளமையானது பிரித்தானிய ராஜகுடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.
மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து, வேல்ஸ் இளவரசர் பட்டமானது இளவரசர் வில்லியத்திற்கு அளிக்கப்பட்டுள்ளதுடன், மன்னராக சார்லஸ் முடிசூடவிருக்கும் தருணத்தில் இந்த முடிவுக்கு வேல்ஸ் கவுன்சில் வந்துள்ளது.
வேல்ஸ் கவுன்சில் முடிவால் இளவரசர் வில்லியத்திடம் இருந்து குறித்த பட்டம் பறிக்கப்படுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. மட்டுமின்றி, 1969ல் சார்லஸ் வேல்ஸ் இளவரசர் பட்டம் பெறும்போதும் அங்குள்ள மக்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், முக்கிய நபர்களால் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
Related posts:
|
|