பிரித்தானிய பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல் : 10 பேர் பலி!
Friday, November 30th, 2018ஆப்கானிஸ்தானிலுள்ள பிரித்தானிய பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட பாரிய தாக்குதலில் 10 பேர் பலியாகியுள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பிரித்தானியாவிற்கு சொந்தமான உலகின் முன்னணி பாதுகாப்பு நிறுவனம் அமைந்துள்ளது.
இந்நிறுவனத்திற்கு வெளியே கார்க்குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் பின்னர் துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டதாகவும் ஆப்கன் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தாக்குதலுக்கு தலிபான்கள் உரிமை கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பாதுகாப்பு நிறுவனம் காபூலிலுள்ள பிரித்தானிய தூதுவராலயத்திற்கான பாதுகாப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உண்மைகளை உடைத்த பன்னீர் - கலக்கத்தில் சசிகலா !
ஜேர்மனியில் கத்தி குத்து - பெண்கள் உட்பட ஆறு பேர் காயம்!
3 ஆண்டு காலப் பகுதியில் 1 இலட்சத்து 10 ஆயிரம் வன்புணர்வு வழக்கு!
|
|