பிரித்தானிய தேம்ஸ் நதி தீவில் பாரிய தீவிபத்து!

Tuesday, May 4th, 2021

தேம்ஸ் நதி தீவில் உள்ள ஒரு தொழில்துறை பிரிவில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது, இதனால் அந்த பகுதியில் சாம்பல் மற்றும் புகை பரவியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று மாலை ஐந்து மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹம்ப்டனில் உள்ள பிளாட்ஸ் ஐயோட்டில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இருந்து வெடிப்பு சத்தம் கேட்டதாக பிரதேச வாசிகள் கூறியுள்ளனர்.

சில உள்ளூர்வாசிகள் தீவில் மூழ்கிய படகுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. எட்டு தீயணைப்பு வாகனங்கள் சேர்ந்த குழுவினர் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

லண்டன் தீயணைப்பு படையினர் தீயில் ‘சிலிண்டர்கள்’ வெடித்ததை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடங்கள் கூறியுள்ளன.

உள்ளூர் ஊடகமான The Hamptonite குறித்த தீப்பரவலை “பிரமாண்டம்” என விபரித்துள்ளது. காற்றின் திசையானது குடியிருப்பு கட்டிடத்தை தீவிபத்தில் இருந்து காப்பாற்றியதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.  

Related posts: