பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவராக மீண்டும் ஜெரமி கோர்பின் தேர்வு!

Sunday, September 25th, 2016

பிரித்தானிய எதிர்க்கட்சியான தொழிற்கட்சி உறுப்பினர்கள் இடதுசாரியாளரான ஜெரமி கோர்பினை, ஒரு கடும் போட்டியை தொடர்ந்து , மீண்டும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஜெரமி கோர்பின் தன்னுடைய வாக்கு சதவிகிதத்தை 62% ஆக உயர்த்தி, அவருடைய ஒரே போட்டியாளரான ஓவன் ஸ்மித்தை வீழ்த்தினார்.அவருடைய தலைமையின் கீழ் இருந்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை நம்பிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தலைவர் பதவிலிருந்து அவரை வெளியேற்ற விரும்பினர்.

முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பேசிய ஜெரமி, எம்.பிக்கள் உட்பட அனைவரும் தன்னுடைய தலைமையின் கீழ் ஒன்றிணையுமாறு வலியுறுத்தினார்.ஜெரமியின் வெற்றியை தொழிற்சங்க தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.ஆனால், பெரிய சவால் ஒன்றை தொழிற்கட்சி எதிர்நோக்கி காத்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

_91367325_3c8e6853-645a-41be-9b3b-47e1fa988fdc

Related posts: