பிரித்தானியா விலகுவது உறுதியானது- கையெழுத்திட்ட தெரேசா மே!
Thursday, March 30th, 2017ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பான அதிகாரபூர்வ கடிதத்தில் பிரதமர் தெரேசா மே கையெழுத்திட்டுள்ளார்.
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலகுவது என சில மாதங்களுக்கு முன்னர் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த நடவடிக்கை அதிகாரபூர்வமாக நடக்குமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது கேள்விகுறியாகவே இருந்து வந்தது.
இந்நிலையில், சில மணி நேரங்களுக்கு முன்னர் தெரேசா மே விலகல் கடிதத்தில் அதிகாரபூர்வமாக கையெழுத்திட்டுள்ளார். இந்த கடிதம் இன்று மாலையே ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்கிடம் அளிக்கப்படும். பின்னர் இதற்கான அதிகாரபூர்வ பணிகள் தொடங்கப்படுகிறது. இந்த விடயத்தை பிரதமர் தெரேசா மே நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் உறுதி செய்யவுள்ளார்.
Related posts:
பூமியில் திடீரென ஏற்பட்ட பிளவில் கட்டிடங்கள் புதைந்தன!
இத்தாலியில் கடும் பனிச்சரிவு: 100 சுற்றுலாப் பயணிகள் மீட்பு!
ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
|
|