பிரித்தானியா விலகக் கூடாது

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகக் கூடாது என அயர்லாந்தின் பிரதமர் லியோ வராத்கர் (Leo Varadkar) தெரிவித்துள்ளார்.
பிரஸ்சல்ஸில் நடத்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அத்துடன் ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தை மற்றும் சுங்க ஒன்றியம் ஆகியவற்றை விட்டு பிரித்தானியா விலகுவதை அயர்லாந்து குடியரசு ஏற்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி சுங்க ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகத் தீர்மானித்துள்ள போதிலும் அதற்கு ஒப்பான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பில் அக்கறை செலுத்தப்பட்டு வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.எனினும், குறித்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் பல கூறுகள் சுங்க ஒன்றியத்தின் விதிகளுக்கு ஒப்பாக காணப்படும் என்பதால் சுங்க ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய விலகாதிருப்பது சிறந்தது எனவும் லியோ சுட்டிக்காட்டியுள்ளார்.ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவது என பிரித்தானியா தீர்மானம் மேற்கொண்டுள்ள போதிலும் பிரித்தானியாவின் எதிர்கால நிலையை கருத்திற் கொள்வது அவசியம் என லியோ வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
|
|