பிரித்தானியா- ரஷ்யா இடையே விரிசல்!

Saturday, June 29th, 2019

பிரித்தானியா, ரஷ்யா உடனான உறவு மோசமாக உள்ள நிலையில், அதை மேம்படுத்த பிரித்தானியா பிரதமர் தெரசா மே, ரஷ்யாவிற்கு சில கட்டளைகளை விதித்துள்ளார்.

ஜப்பான், ஒசாகாவில் நடந்த ஜி20 மாநட்டில் பங்கேற்க சென்ற தெரசா மே, மாநாட்டின் ஒரு பகுதியாக ரஷ்ய தலைவர் புதின் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இதுகுறித்து பேசிய தெரசா மே, ரஷ்யாவை சேர்ந்தவர் பிரித்தானியாவில் உளவு பார்த்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. உறவை மேம்படுத்த ரஷ்ய பொறுப்பற்ற மற்றும் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கும் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு சாலிஸ்பரியில், செர்ஜி ஸ்கிரிபால் நடந்த தாக்குதலுடன் தொடர்புடைய இரண்டு ரஷ்யர்களை ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரசா மே வலியுறுத்தியுள்ளார்.

இரு நாடுகள் இடையேயான உறவை மேம்படுத்த நாங்கள் தயாராக தான் இருக்கிறாம். ஆனால், இந்த மாற்றத்தை ஏற்படுத்த ரஷ்யா அரசாங்கம் பாதை மாற வேண்டும் என பிரித்தானியா பிரதமர் தெரசா மே குறிப்பிட்டுள்ளார்.

Related posts: