பிரித்தானியா பொதுத்தேர்தல் – தெரசா மே !

Thursday, April 20th, 2017

பிரித்தானியாவில் பொது தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் தெரசா மே அறிவித்தார். இதன்படி ஜூன் மாதம் 8ஆம் திகதியன்று நடைபெறவிருக்கும் பொது தேர்தலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர்

இந்த முடிவிற்கு 522 உறுப்பினர்கள் ஆதரவும், 13 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். தொழிற்கட்சி மற்றும் லிபரல் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால், மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேற்பட்ட ஆதரவுகள் கிடைத்துள்ளன.

தேர்தல் மூலம் பெறப்படும் புதிய ஆணை, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளிவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் தனக்குள்ள அதிகாரத்தை வலுப்படுத்தும், மேலும் எதிர்காலத்திற்கு அது நிச்சயமான ஒரு சூழலை வழங்கும் என பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.

Related posts: