பிரித்தானியா பேரிழப்பை சந்திக்கும் என முன்னணி விஞ்ஞானி நீல் பெர்குசன் எச்சரிக்கை!

Monday, April 27th, 2020

பிரித்தானியாவில் அவசரப்பட்டு ஊரடங்கை தளர்த்தும் நிலை ஏற்பட்டால் அது மேலதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் என முன்னணி விஞ்ஞானி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியரும் போரிஸ் அரசாங்கத்திற்கான ஆலோசகரில் ஒருவருமான நீல் பெர்குசன் ஊரடங்கு நீக்குவது தொடர்பில் தமது அதிருப்தியை கடுமையாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு இளைஞர்கள் மற்றும் மிக ஆரோக்கியமானவர்கள் பணிக்கு திரும்பினாலும், சிக்கல் கடுமையாக இருக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.

மாறாக எச்சரிக்கைகளை மீறி, அரசாங்கம் ஊரடங்கை தளர்த்தும் முடிவுக்கு வரும் என்றால், ஆண்டு இறுதிக்குள் தற்போதைய உறுதி செய்யப்பட்ட கொரோனா நோயாளிகளின் 5 மடங்கு எண்ணிக்கையை பிரித்தானியா எதிர்கொள்ள நேரிடும் என நீல் பெர்குசன் எச்சரித்துள்ளார்.

இதனிடையே பிரதமர் பொறுப்பை மேற்கொண்டுவரும் டொமினிக் ராப், நாடு தற்போது கொரோனா பாதிப்பின் மோசமான மற்றும் ஆபத்தான கட்டத்தில் உள்ளது,

தற்போது அரசாங்கம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

தற்போதைய சூழலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென்று எகிறும் நிலை ஏற்பட்டால், பிரித்தானியா மீண்டும் ஊரடங்கு நிலைக்கு உறுதியாக தள்ளப்படும் என்றார்.

ஊரடங்கால் எத்தனை பிரித்தானியர்கள் பாதிக்கப்பட்டார்கள் என தெரியவில்லை என கூறிய நீல் பெர்குசன்,

தற்போதைய இக்கட்டான சூழலில் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதில் அரசியல்வாதிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

கொரோனா பாதுகாப்பு அரணில் பிரித்தானியர்கள் 80 சதவீத மக்களை நீங்கள் கொண்டு வந்தீர்கள் என்றால்,

எங்கள் கணிப்புகளின் அடிப்படையில், இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவில் இறந்தவர்கள் எண்ணிக்கை 100,000 எட்டும் என நீல் பெர்குசன் எச்சரித்துள்ளார்.

ஊரடங்கு நடவடிக்கைகள் பிரித்தானியாவில் பலனளித்து வருகிறது, பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சரிவடைந்து வருகிறது.

ஊரடங்கு பிறப்பிக்க மறுக்கும் ஸ்வீடனை ஒப்பிட்டு பேசிய அவர், அங்குள்ள இறப்பு எண்ணிக்கையு, பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: