பிரித்தானியா தயாராக வேண்டும் – இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநர்!

Tuesday, August 8th, 2017

 

உடன்பாடற்ற பிரெக்சிற் பேச்சுவார்த்தைக்கு பிரித்தானியா நன்கு தயாராக வேண்டும் என இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பாக தயாராவதன் மூலம், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தாலும் நம்பகமான மாற்று வழி உள்ளது என்பதை பிரஸ்சல்ஸிற்கு பிரித்தானியா நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரஸ்சல்ஸுடனான வர்த்தக ஒப்பந்தம் தோல்வியடைய வேண்டும் என்பதை யாரும் விரும்பவில்லை. ஆனால், எவ்வித உடன்பாடும் எட்டப்படாத நிலையில், ஐரோப்பாவைவிட்டு வெளியேறுவதில் பிரித்தானியா உறுதியாக உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும். அத்துடன், வெற்றிகரமான பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்வதற்கு நம்பகத்தன்மை கொண்ட ஒரு நிலைப்பாட்டை கொண்டிருத்தல் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts: