பிரித்தானியா எண்ணெய் கப்பலை ஆயுதங்களுடன் சுற்றி வளைத்த ஈரான்!

Thursday, July 11th, 2019

பிரித்தானியா எண்ணெய் டேங்கர் கப்பலை, ஈரானின் ஐந்து ஆயுதமேந்திய படகுகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், ஈரானின் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாரசீக வளைகுடா கடலில் பயணித்துக் கொண்டிருந்த பிரித்தானியா எண்ணெய் டேங்கரை ஈரானின் ஐந்து ஆயுதக் கப்பல்கள் சுற்றி வளைத்துள்ளது.

பின்னர், பாதையை மாற்றி அருகிலுள்ள ஈரானிய பிராந்திய கடற்பகுதியில் டேங்கர் கப்பலை நிறுத்துமாறு, ஈரான் அதிகாரிகள் உத்தரவிட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் இருந்த அமெரிக்க விமானம் சம்பவத்தின் வீடியோவை பதிவு செய்ததாக அமெரிக்க ஊடகம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் ராயல் கடற்படைக்கு சொந்தமான போர் கப்பலான எச்.எம்.எஸ். மான்ட்ரோஸ், டேங்கர் கப்பலுக்கு பின்னால் பாதுகாப்பாக இருந்து அழைத்துச் சென்று கொண்டிருந்துள்ளது.

இந்நிலையில், பிரித்தானியா போர் கப்பலில் இருந்த அதிகாரிகள், பின்வாங்கும் படி ஈரான் ஆயுதக் கப்பல்களுக்கு வாய்மொழி எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து ஈரான் படகுகள் பின்வாங்கி உள்ளன.

கடந்த வாரம், சிரியாவிற்கு ஈரான் எண்ணெய் எடுத்துச்சென்ற டேங்கர் கப்பலை பிரித்தானியா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதற்கு பழிவாங்கும் விதமாக ஈரான் இவ்வாறு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.


தமிழக சட்டசபை தேர்தல் மதியம் 1 மணி நிலவரப்படி 42.1 சதவீத வாக்குப்பதிவு
பிரபல விமான தயாரிப்பு நிறுவனத்தின் மீது பிரித்தானியா குற்றவியல் விசாரணை!
தலைமை நீதிபதி பதவி நீக்கம்!
அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!
புல்வாமா தாக்குதல் எதிரொலி – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளுக்கான அனுசரணை நிறுத்தம்!