பிரித்தானியா உள்துறை செயலாளர் பதவி இராஜினாமா!

Monday, April 30th, 2018

பிரித்தானியாவின் உள்துறை செயலாளர் அம்பர் ரட் பதவி விலகியுள்ளார்.

சட்டவிரோதமாக பிரித்தானியாவில் தங்கியுள்ளவர்களை வெளியேற்றுவது தொடர்பில் நாடாளுமன்றத்தை பிழையான முறையில் வழிநடத்தியதாக அவர் மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்ததனாலேயே அவர் பதவி விலகியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் இருந்து எதிர்வரும் சில ஆண்டுகளில் 10 சதவீதமான அகதிகளை நாடுகடத்துவதற்கான இலக்கினை அவர் நிர்ணயித்திருப்பதாக அந்த நாட்டின் பத்திரிகை ஒன்று தகவல்வெளியிட்டிருந்ததால் அவர் கடும் விமர்சனங்களுக்கு ஆளாக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவரது பதவி விலகல் விண்ணப்பத்தை அந்த நாட்டின் பிரதமர் தெரேசா மேய் ஏற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இன்று புதிய உள்துறை செயலாளர் யார் என்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: