பிரித்தானியாவை பழிதீர்க்குமா ஈரான்?

Saturday, July 20th, 2019

ஈரான், ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு எண்ணெய் டேங்கர்களை, 23 பணியாளர்களுடன் கைப்பற்றிய பின்னர் அனைத்து பிரித்தானியா கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்திய கடல் வழியை தவிர்த்துக் கொள்ளுமாறு பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளைகுடாவில் பதட்டங்கள் வியத்தகு முறையில் அதிகரிப்பது குறித்து விவாதிக்க அரசாங்கத்தின் கோப்ரா குழுவின் அவசர கூட்டத்தைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா நாட்டிற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்களை ஈரான் கடற்படை பறிமுதல் செய்துள்ளது. சர்வதேச கடல் விதிமுறைகளை அவை மீறியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

முதலில் stena impero என்ற ஒரு சரக்கு கப்பலை பறிமுதல் செய்திருப்பதாக ஈரான் அரசு அறிவித்தது. ஆனால் MV Masdar என்ற மற்றொரு கப்பலையும் ஈரான் கடற்படையினர் பிடித்துச் சென்றதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விளக்கமளித்த ஈரான், MV Masdar கப்பலுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது. அதன் பின்னர், கப்பல் அதன் பயணத்தை தொடர நாங்கள் அனுமதி அளித்து விட்டோம் என தெரிவித்தனர். MV Masdar கப்பல் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டதை அந்நிறுவனம் தரப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இம்மாத தொடக்கத்தில், சிரியாவுக்கு கச்சா எண்ணெயை கொண்டு செல்ல முயன்றதாக ஈரான் எண்ணெய் கொண்டு சென்ற சரக்கு கப்பலை பிரித்தானியா கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இதற்கு பதிலடியாக ஈரான் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இப்பிரச்சினை காரணமாக பிரித்தானியா ஈரான் உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பேசிய பிரித்தானியா பாதுகாப்பு செயலாளர் ஜெர்மி ஹனட், பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஈரான் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ளும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரித்தானியாவுககு ஆதரவாக நிற்பதாக உறுதியளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் பெரிய சிக்கலில் இருப்பதாக எச்சரித்துள்ளார்

Related posts: