பிரித்தானியாவுடன் சுமுக உறவை எதிர்பார்க்கிறோம் – ஐரோப்பிய ஒன்றியம்!

Thursday, July 14th, 2016

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகிய போதும் அதனுடன் முடிந்தவரை சுமூகமானதொரு உறவையே எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை தலைவர் ஃபெடரீகா மொகரீனே தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜியான் க்ளட் யன்கர், விரோத உணர்வுடன் பிரித்தானியா பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லையென்றும், பிரித்தானியா வெளியேறுவது குறித்த பேச்சுவார்த்தையில், வெறுப்புணர்வு மற்றும் பழிவாங்கும் உணர்வுகள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கான தங்களது பயணத்தின் கடைசியில் இருவரும் இக்கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு விலக முயற்சிக்கும் மற்ற நாடுகள் அதிலிருந்து பின்வாங்கும் படியாக, பிரித்தானியாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான ஒரு பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும் என்ற ஊகங்கள் பரவலாக உள்ளன.

பிரித்தானியா வெளியேறுவதால் மற்ற நாடுகளும் வெளியேற விரும்பக்கூடும் என்பதை தான் நம்பவில்லை என்று மொகரீனே தெரிவித்துள்ளார்.

Related posts: