பிரித்தானியாவில் வன்முறைகள் அதிகரிப்பு!

Saturday, April 15th, 2017

பிரித்தானியாவில் அண்மைக்காலமாக வன்முறைகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் பிரித்தானிய பொலிஸ் பிரிவினரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறைகளின் அதிகரிப்பிற்கு இதுவரைக் காலமும் வரவுசெலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட குறைப்புக்களும் பகுதியளவில் பங்களிப்பு செலுத்தியிருக்கலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸாரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் துப்பாக்கிப் பாவனையினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்கள் கடந்த 12 மாதங்களில் 42 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கத்திகளை உபயோகித்து மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் 24 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வன்முறைகள் நிகழ்வதற்கான முக்கிய காரணம் எதுவென திட்டவட்டமாக குறிப்பிட முடியாது என தெரிவித்துள்ள பொலிஸார், சமூக அந்தஸ்து மற்றும் சுய பாதுகாப்பு கருதியே சில இளவயதினர் வன்முறைகளில் ஈடுபடுகின்றதாக தெரிவித்துள்ளனர்.

எனினும் வன்முறை கும்பல்களுடன் தொடர்பு வைத்துள்ள காரணத்தினாலேயே அவர்கள் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் எனவும் பெலிசார் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: