பிரித்தானியாவில் மக்களின் பாதுகாப்பு குறித்த சர்ச்சைக்குரிய திட்டம்!

Saturday, August 20th, 2016

பொதுமக்களை தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க, தனிப்பட்ட தரவுகளை பெரிய அளவில் தடுத்துப் பரிசோதிப்பதும், சேகரிப்பும் மிகவும் முக்கியம் என்று பிரித்தானிய பாதுகாப்பு குறித்த சட்டமுன்வரைவின் மீது நடத்தப்பட்ட பக்கசார்பற்ற மீளாய்வு முடிவு செய்திருக்கிறது.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தற்போது பரிசீலிக்கப்படும் இந்த சட்டங்களில் இந்த அதிகாரங்கள்தாம் மிகவும் சர்ச்சைக்குரிய அம்சங்களாக இருக்கின்றன.

சந்தேக வரம்புக்குள் வர சாத்தியக்கூறு இல்லாதவர்கள் தொடர்பாகக் கூட அதிகமான தரவுகளை சேகரிப்பதைத் தவிர மாற்று வழிகள் இல்லை என்று இந்த மீளாய்வு தெரிவித்திருக்கிறது. ஆனால், அந்தரங்கத்தில் தலையிடுவதை குறைப்பது எப்படி, மாறுகின்ற தொழில்நுட்பத்தின் பாதிப்புகள் ஆகியவை பற்றி உளவு நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு பக்கசார்பற்ற வல்லுநர்களை நியமிக்க வேண்டுமென அது பரிந்துரைத்துள்ளது. இந்த முடிவுகளை பிரிட்டன் பிரதமர் தெரீசா மே வரவேற்றுள்ளார்.

 

Related posts: