பிரித்தானியாவில் தனது முன்னணி கார்களின் இரு பதிப்புகளை உற்பத்தி செய்ய நிஸான் முடிவு!

ஜப்பானிய கார் உற்பத்தியாளரான நிஸான், தனது நிறுவனத்தின் முன்னணி இரு மாடல்களின் புதிய பதிப்புகளை பிரித்தனில் உற்பத்தி செய்ய உள்ளதாக முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது..
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்ததனியா வெளியேற வாக்களித்ததை தொடர்ந்து, பிரித்தானிய தொழிற்துறைக்காக எடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய முதல் ஒப்பந்தம் இது. நிஸான் நிறுவனத்தின் இந்த முடிவு குறைந்தது, 7000 பணியிடங்களை பாதுகாக்கும்.
சண்டெர்லாண்டில் உள்ள கார் உற்பத்தி ஆலை லாபகரமாக இயங்கும் நிலைக்கு தேவைப்படும் சூழ்நிலைக்கான உத்தரவாதத்தை பிரித்தானிய அரசாங்கம் வழங்கியிருப்பதாக நிஸான் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற கோரி பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்ததை தொடர்ந்து, பிரிட்டனிலிருந்து நிஸான் வெளியேறப்போவதாக முன்னர் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|