பிரித்தானியாவின் பிரபல கால்பந்து அணி உரிமையாளர் பலி!

பிரித்தானியாவின் பிரபல கால்பந்து அணியான லெய்செஸ்டர் சிட்டி உரிமையாளரின் ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கியதில் அவர் உடல் கருகி மரணமடைந்துள்ளார்.
தாய்லாந்து கோடீஸ்வரரான 61 வயது Vichai Srivaddhanaprabha என்பவரே இந்த கோர விபத்தில் கொல்லப்பட்டவர்.
லெய்செஸ்டர் சிட்டி கால்பந்து அணியின் உரிமையாளரான இவர் லெய்செஸ்டர் பகுதியில் நடைபெறும் ஒவ்வொரு விளையாட்டின்போதும்,
அவர்களது சொந்த ஸ்டேடியத்தின் உள்ளே இருந்து விளையாட்டு துவங்கும் சில மணித்துளிகள் முன்பு தமது ஹெலிகொப்டரை கிளப்பிச் செல்வது வழக்கம்.
இன்றும் அதேப்போன்று ஹெலிகொப்டரில் கிளம்பியவர் நெருப்பு கோளமாக அரங்கத்தின் வெளியே விழுந்ததை கால்பந்து ரசிகர்கள் நேரிடையாக கண்டுள்ளனர்.
ஹெலிகொப்டரில் உள்ள விசிரியில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
லெய்செஸ்டர் சிட்டி கால்பந்து அணியின் நிர்வாகிகள் தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாருடன் இணைந்து செயல்படுவதாகவும் மேலதிக தகவல்களை உடன் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்
Related posts:
|
|