பிரிக்ஸ் சர்வதேச மாநாடு ஒத்திவைக்கப்பட்டது – பிரிக்ஸ் சர்வதேச மாநாடு – உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விடுத்தது ரஷ்ய அரசாங்கம்!

Thursday, May 28th, 2020

ரஷ்யாவில் நடைபெறவிருந்த பிரிக்ஸ் சர்வதேச மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பினை ரஷ்ய அரசாங்கம் விடுத்துள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் மாநாடு எதிர்வரும் ஜூலை மாதம் 21 தொடக்கம் 23 ஆம் திகதிவரை ரஷ்யாவில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய புதிய திகதி தொடர்பான இறுதி தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: