பிரான்ஸ் ஜனாதிபதி – இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!

Tuesday, June 19th, 2018

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை நேற்று சந்தித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளுடனான உறவை மேம்படுத்தும் நோக்கில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், 7 நாள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்படி, நேற்று பிரான்ஸ் சென்ற அவர் அந்த நாட்டு ஜனாதிபதியைச் சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்த பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

முன்னதாக இத்தாலி சென்ற சுஷ்மா, அந்த நாட்டு பிரதமரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: