பிரான்ஸை ஒன்றிணைப்பேன் – மக்ரோங் உறுதி!
Tuesday, May 9th, 2017பிளவுபட்டுள்ள பிரான்ஸை ஒன்றிணைப்பேன் என பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட இமானுவேல் மக்ரோங் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “பிரான்ஸை ஒன்றிணைத்து ஐரோப்பா மற்றும் பிரான்சுக்கு இடையில் உள்ள உறவை வலுப்படுத்துவேன். பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவின் அபிலாஷைகளை காப்பாற்றும் வகையில் எனது பணிகள் அமையும். பிரான்ஸில் உள்ள தீவிரவாதிகள் முற்றாக இல்லாதொழிக்கப்படுவர். பிரான்ஸில் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள தீவிரவாதிகள் முற்றாக அழிக்கப்படுவர். சொந்த மண்ணில் மட்டுமின்றி சர்வதேச ரீதியாகவும் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் நாடாக பிரான்ஸ் உருவாகும். இனிவரும் ஐந்தாண்டுகளுக்கு நான் என்னால் ஆன அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு பிரான்ஸை உன்னதமான நிலைக்கு கொண்டு வருவேன்” என தெரிவித்தார்.
நேற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மக்ரோங் 60 சதவீத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார். பிரான்ஸின் அரசியல் வரலாற்றில் தெரிவு செய்யப்பட்ட இளம் ஜனாதிபதி எனும் பெருமை 39 வயதான இமானுவேலையே சாரும்.
Related posts:
|
|