பிரான்ஸில் ஏற்பட்ட வௌ்ளத்தால் பெருமளவில் மக்கள் இடம்பெயர்வு!

Friday, June 3rd, 2016

பிரான்ஸில் ஏற்பட்டுள்ள வௌ்ளம் காரணமாக பெருமளவில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பாரிஸ் நகரை அண்மித்துள்ள ஆறுகளும் பெருக்கெடுத்துள்ளமையினால் குடியிருப்புகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.

பிரான்ஸ் நகரான லோங்ஜூமோ பகுதியில் இருந்து இதுவரை 2,000 இற்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனர்.

நேற்றைய தினம் மாத்திரம் பெருமளவிலான மக்கள் குறித்த பகுதியிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக வௌ்ளப் பெருக்கு அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள மோசமான வௌ்ளப் பெருக்கு அனர்த்தமாக தற்போதைய வானிலை பதிவாகியுள்ளதாக பிரான்ஸின் வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.

பிரதேசவாசிகள் மற்றும் வௌ்ள அனர்த்தத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதுடன் படகுகளின் மூலம் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

லோரி மற்றும் செய்ன் ஆற்றக்கரையோரப்பகுதிகளில் வசித்த மக்களின் செல்லப்பிராணிகள் அவர்களின் குழந்தைகள் படகுகள் மூலம் மத்திய பிரான்ஸிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும் சில நாட்களுக்கு பிரான்ஸின் குறித்த சில பகுதிகளில் மக்கள் அதிக அசௌகரியங்களை எதிர்நோக்கும் வாய்ப்புள்ளதாக பிரான்ஸ் பிரதமர் மனுவல் வோல்ஸ் தெரிவித்துள்ளார்.

1960 ஆம் ஆண்டிற்கு பின்னர் கிரேட் பாரிஸ் எதிர்நோக்கும் பாரிய இயற்கை அனர்த்தமாக இந்த வௌ்ளப்பெருக்கு பதிவாகியுள்ளதாக பிரான்ஸின் வானிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts: