பிரான்ஸின் உயரிய விருதைப் பெற்றார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி!
Friday, July 14th, 2023பிரான்ஸின் தேசிய தினம் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட்டுவரும் நிலையில் அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் மோடி நேற்று பிரான்ஸ் சென்றிருந்தார்
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான ’கிராண்ட் குரொஸ் ஒஃப் தி லீஜியன் ஒஃப் ஹொனர்’ (Grand Cross of the Legion of Honor )என்ற விருதை மோடிக்கு அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் வழங்கியுள்ளார்.
இராணுவம் மற்றும் பொதுமக்களில் சிறந்த சேவை ஆற்றியவர்களுக்கு பிரான்ஸ் அரசால் இவ்விருது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவ்விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் மோடி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வெளிநாட்டவர்கள் 6 மாதங்களுக்கு மேல் சிறையில் இருந்தால் நாடு கடத்தப்படுவர் - கனேடிய அரசு!
எதிர்வரும் 3 நாட்களில் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலை வீழ்ச்சியடையும் - எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையா...
அதிக வெப்பநிலையுடனான நாள்களில் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிருங்கள் - சுகாதார அமைச்சினால்,...
|
|