பிரான்சில் தமிழர் படுகொலை: நான்கு இலங்கையர்கள் கைது!

Tuesday, October 18th, 2016

 

பிரான்ஸில் வைத்து இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த 16ஆம் திகதி பிரான்சில் உள்ள ஒபேவில்லியேவில் (Aubervilliers – Seine-Saint-Denis) எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 16ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற இந்த கொலை சம்பவத்தில் 30 வயது மதிக்கத்தக்க இலங்கை தமிழ் இளைஞர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த கொலை சம்பவம் தொடர்பில் நான்கு இலங்கை இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த கொலைக்கான முழுமையான விபரங்கள் இது வரையிலும் தெரியவில்லை. ஆனால் ஒரு மோதலின் முடிவிலேயே, இந்தப் படுகொலை நடந்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மோதல்கள் இடம்பெற்றமைக்கான அடையாளங்கள் கொலை இடம்பெற்ற வீட்டில் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள பொலிஸார், பொபினி நீதிமன்றத்தின் பணிப்பில், கொலைக்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

download

Related posts: