பிரான்சில் கண்டெடுக்கப்பட்ட டைனோசரின் எச்சம்!

Friday, July 26th, 2019

சுமார் 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் இன விலங்கின் தொடை எலும்பு ஒன்றை தென் மேற்கு பிரான்சில் இருந்து அறிவியல் ஆய்வாளர்கள் மீட்டுள்ளனர்.

தென் மேற்கு பிரான்சில் உள்ள Angeac-Charente பகுதியிலேயே இந்த டைனோசர் இன விலங்கின் தொடை எலும்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஆறரை அடி நீளமும் 500 கிலோ எடையும் கொண்ட இந்த தொடை எலும்பானது செடி கொடிகளை மட்டுமே உணவாக கொண்ட SAUROPOD டைனோசருடையது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த வகை டைனோசரானது பிரான்சின் Cognac நகர பகுதியில் வாழ்ந்து வந்துள்ளது இதில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டுவரும் நிலையில் இதே பகுதிகளில் இருந்து இதுவரை சுமார் 45 வகை இன விலங்குகளின் 7,500 எலும்புகளை மீட்டுள்ளனர்.

Related posts: