பிரஸல்ஸ் ரயில் நிலையத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தியவர் சுட்டுக் கொலை!

Thursday, June 22nd, 2017

பிரஸல்ஸின் மத்திய ரயில் நிலையத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, எனினும் தற்கொலை குண்டுதாரி பெல்ஜியம் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளாதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று இரவு பெல்ஜியத்தின் ப்ரஸல்ஸ் புகையிரத நிலையத்தில் வைத்தே இந்த சந்தேகநபர் பொலிஸாரால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதுவொரு பயங்கரவாத தாக்குதலென பெல்ஜிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் தற்கொலை குண்டுதாரி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை ஒரு மணி நேரத்திற்குள் முடிவுக்கு கொண்டுவந்த பாதுகாப்பு படையினருக்கு அந்நாட்டு பிரதமர் Charles Michel நன்றி தெரிவித்துள்ளார்

Related posts: