பிரஸல்ஸ், பாரிஸ் தாக்குதல் சந்தேக நபர்கள் 5 பேர் பிரித்தானியாவில் கைது

அண்மையில் பிரஸல்ஸ் மற்றும் பாரிஸ் ஆகிய நகரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஐவரை பிரித்தானிய காவல்துறையினர் கைது செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இவர்களுள் 26, 40, 59 வயதுடைய மூன்று ஆண்களும் 29 வயதுடைய பெண் ஒருவரும் கடந்த வியாழக்கிழமையன்று பிர்மிங்கமிலும் 26 வயதுடைய மற்றொரு நபர் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கேட்விக் விமான நிலையத்திலும் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் ஐந்து பேருமே பிர்மிங்கமில் வசித்துவந்தவர்கள். இந்தக் கைது சம்பவங்கள், மிக முக்கியமானது என காவல்துறை தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, பிரிட்டனுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் இருக்கிறதா என்பதைத் தடுக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக எம்ஐ5 உளவு அமைப்புடனும் பெல்ஜியம், பிரான்ஸ் அதிகாரிகளுடனும் இணைந்து பிரித்தானிய காவல்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. கேட்விக் விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட நபர், பிரிட்டனுக்கு வந்து இறங்கியதும் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் எந்த நாட்டில் இருந்து வந்தார் என்பது கூறப்படவில்லை.
Related posts:
|
|