பிரபல விமான தயாரிப்பு நிறுவனத்தின் மீது பிரித்தானியா குற்றவியல் விசாரணை!

Monday, August 8th, 2016

மோசடி, லஞ்சம் மற்றும் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஐரோப்பிய விமான தயாரிப்பாளரான ஏர் பஸ் நிறுவனம் மீது பிரித்தானியா தீவிர மோசடிகளை விசாரிக்கும் அலுவலகமானது குற்றவியல் விசாரணையை தொடங்கியுள்ளது.

மூன்றாம் தரப்பு இடைத்தரகர்களை பயன்படுத்துவது தொடர்பாக எழுந்த முரண்பாடுகள் குறித்து இந்த விசாரணை கவனம் செலுத்தும் என ஏர் பஸ் நிறுவனத்தின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

முக்கிய வணிக ஒப்பந்தங்களில் ஈடுபடுத்தப்படும் இடைத்தரகர்களை எதிர்ப்பதை உலகெங்கிலும் லஞ்ச எதிர்ப்பு சட்டங்கள் இலக்கு வைக்கின்றன. ஏர் பஸ் நிறுவனம் பிரான்சில் அதன் தலைமையகத்தை கொண்டுள்ளது. மேலும், ஐக்கிய ராஜ்ஜியத்தில் பல முக்கிய செயல்பாடுகளை கொண்டுள்ளது.

 

Related posts: