பிரபல பெண் பாடகர் சுட்டுப் படுகொலை!  மேடையில் நிகழ்ந்த பயங்கரம்!

Sunday, June 12th, 2016

அமெரிக்க நாட்டில் பெண் பாடகர் ஒருவர் மேடையில் பாடிக்கொண்டுருந்த நேரத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புளோரிடா மாகாணத்தில் உள்ள Orlando நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் ‘வாய்ஸ்’ என்ற இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற 22 வயதான கிறிஸ்டினா கிரிம்மி என்ற பெண் பாடகர் பங்கேற்றுள்ளார்.மேடையில் நிகழ்ச்சி தொடங்கியதும், அவர் உற்சாகமாக பாடிக்கொண்டுருந்துள்ளார்.

அப்போது, கூட்டத்தின் மத்தியில் இருந்து அவரை நோக்கி துப்பாக்கி குண்டுகள் வெடிக்க அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்துள்ளார்.

இந்த காட்சியை கண்டு அதிர்ச்சியுற்ற பாடகரின் சகோதரர் உடனடியாக துப்பாக்கியால் சுட்ட நபரை தடுத்தி நிறுத்தி சண்டையிட்டுள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு அதே இடத்தில் உயிரிழந்தார்.குண்டு காயம் அடைந்த பாடகர் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தாக்குதல் நடந்த போது நபரிடம் இரண்டு துப்பாக்கிகள் இருந்துள்ளன.

ஆனால், ஆயுதங்களை ஏந்தியவாறு அவர் எப்படி அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டார் என தெரியவில்லை.

மேலும், பாடகரை சுட்டுக் கொன்றதுக்கு முன் விரோதம் காரணமா அல்லது பாடல் நிகழ்ச்சிகளில் எழுந்த போட்டியா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts: