பிரபல அணு விஞ்ஞானிக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்!

Monday, August 8th, 2016
அமெரிக்காவுக்கு முக்கிய தகவல்களை கொடுத்ததாக குற்றஞ்சட்டப்பட்ட அணு விஞ்ஞானிக்கு தான் மரண தண்டனையை நிறைவேற்றி இருப்பதாக ஈரான் உறுதிப்படுத்தி உள்ளது.

ஏழு ஆண்டுகளுக்குமுன், மெக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஷாஹ்ராம் அமிரி திடிரென காணாமல் போனார். மீண்டும் அமெரிக்காவில் அவர் தலைகாட்டிய போது, சி.ஐ.ஏ அதிகாரிகளால் தான் கடத்தப்பட்டதாக கூறினார்.

ஆனால், அங்கிருந்து தப்பி வந்ததாக அவர் கூறினார். பின், இரானுக்கு திரும்பிய போது, நாயகனைப் போன்ற வரவேற்பை பெற்றிருந்தார். பின்னாளில், விசாரணைகளுக்கு அமிரி உட்படுத்தப்பட்டார். தன் சொந்த விருப்பத்தின் பேரிலே அமெரிக்க சென்றதாகவும், மேலும் பல பயனுள்ள தகவல்களை தெரிவித்ததாகவும் அமெரிக்க தெரிவித்துள்ளது.

Related posts: