பிரதமர் மோடி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் – பா.ஜ.க. மூத்த தலைவர் அமித் ஷா!
Friday, May 17th, 2024”பிரதமர் நரேந்திர மோடி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் என தான் உறுதியாக நம்புவதாக” மத்திய உட்துறை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பிரபல சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தனிநாடு என்று யாராவது சொன்னால் அது மிகவும் ஆட்சேபணைக்கு உரியது.
இந்த நாட்டை பிரிக்கவே முடியாது. காங்கிரஸ் கட்சியின் உயரிய தலைவர் ஒருவர் வடஇந்தியா மற்றும் தென்னிந்தியாவை பிரிப்பது பற்றி பேசினார். காங்கிரஸ் கட்சி அதை மறுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் செயல்திட்டத்தை நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்.
கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களில் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கப் போகிறது. பிரதமர் மோடி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் என நான் உறுதியாக நம்புகிறேன்” இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
|
|