பிரதமர் மேயின் திட்டம் திருப்புமுனையாக அமையாது – அங்கெலா மேர்க்கல்!
Monday, June 26th, 2017
பிரித்தானியாவில் வாழும் ஒன்றிய பிரஜைகள் பிரெக்சிற்றின் பின்னரும் தொடர்ந்து வசிக்கலாம் எனும் பிரதமர் மேயின் திட்டம் திருப்புமுனையாக அமையாது என ஜேர்மனிய அதிபர் அங்கெலா மேர்க்கல் தெரிவித்துள்ளார்.
பெல்ஜியத்தில் நடத்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டின் நிறைவில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் உரையாற்றுகையில் “பிரித்தானியாவில் குறைந்தபட்சம் ஐந்து வருடங்களாக வசித்து வரும் ஒன்றியப் பிரஜைகள் பிரெக்சிற்றின் பின்னரும் அங்கு இருக்க முடியும் என்பது ஒரு சிறந்த ஆரம்பத்திற்கான அறிகுறி. எனினும்இ அது ஒரு திருப்புமுனையாக அமையாது. குறித்த விடயம் தொடர்பில் நாம் சிறந்த உடன்படிக்கை ஒன்றை எட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதனால்இ நாம் மேலும் பல விடயங்கள் தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதே எனது கருத்து” என தெரிவித்தார்.
குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங்கும் கலந்துகொண்டுள்ளார். அத்துடன் மேர்க்கலின் கருத்துடன் தான் இணங்குவதாகவும் மெக்ரோங் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|