பிரதமர் பதவியைத் துறக்கிறார் தெரேசா மே!

Friday, May 24th, 2019

எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதாக பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரக்சிட் உடன்படிக்கை தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் தெரேசா மே ஆல் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே தெரேசா மே இன்றைய தினம் தனது பதவி விலகும் முடிவை எடுத்துள்ளார்.

‘என்னால் முடிந்ததைச் செய்தேன். அந்த ஒப்பந்தத்தை ஆதரிக்க எம்.பி.க்களை சமாதானப்படுத்த நான் முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறேன்.

துரதிருஷ்டவசமாக நான் அவ்வாறு செய்ய முடியவில்லை. இது எனக்கு மிகவும் ஆழ்ந்த வருத்தத்தைத் தருகிறது. என்னால் ப்ராக்ஸிட்டை நிறைவேற்ற முடியவில்லை.’ என கண்ணீருடன் தெரிவித்தார்.

Related posts: