பிரதமர் தெரேசா மே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

Tuesday, July 4th, 2017

பிரித்தானிய பிரதமர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

நடத்தப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த ஆர்ப்பாட்டம் மத்திய லண்டனில் உள்ள சர்வதேச ஊடகமான பி.பி.சியின் தலைமையகத்தின் முன்னால் ஆரம்பிக்கப்பட்டு நாடாளுமன்ற சதுக்கம் வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் “இனிமேலும் சிக்கன நடவடிக்கை வேண்டாம்” “சிக்கனம் பிடிப்பதால் உயிர்கள் பறிபோகின்றன” மற்றும் “டோரிக்கள் வெளியேற வேண்டும்” போன்ற பதாதைகளை கையில் ஏந்தி ஆர்ப்பரித்துள்ளனர்.அத்துடன் கிரென்பெல் கட்டட தீ விபத்தில் உயிரிழந்த சுமார் 80 அப்பாவி பொதுமக்களின் ஆத்மசாந்தி கருதி ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.

Related posts: