பிரதமர் தெரேசா மேயை பதவி விலக வலியறுத்தி மனு!
Sunday, June 11th, 2017பிரதமர் தெரேசா மேயை பதவி விலகுமாறு வலியறுத்தி சுமார் 3 இலட்சத்திற்கும் அதிகமான பிரித்தானியர்கள் கையெழுத்திட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
பிரித்தானிய பொதுத்தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை இழந்த தெரேசா மே தலைமையிலான கொன்வவேற்றிவ் கட்சி, ஜனநாயக ஒன்றியக் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க தீர்மானித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் ஆட்சி அமைப்பதற்கு 326 ஆசனங்களை பெற்று பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும். ஆனால் ஆளும் கொன்சவேற்றிவ் கட்சியும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும் பெரும்பான்மையை நிரூபிக்க தவறின.
கொன்சவேற்றிவ் கட்சி 318 ஆசனங்களை பெற்ற அதேவேளை, தொழிலாளர் கட்சி 262 ஆசனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து மகாராணி எலிசபெத்தை நேற்று சந்தித்த தெரேசா மே, ஜனநாயக ஒன்றியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதற்கு மகாராணியின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|